Last Updated:
தேர்தல் ஆணையத்தின் அனைத்து வாதங்களையும் ஏற்று, SIR-க்கு எதிரான அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் ரத்து செய்ததாகவும் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தெரிவித்தார்.
பிகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற SIR செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, பிகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொண்டது.
இதில் போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், SIR வேறுபட்ட செயல்முறை என்பதால் மட்டுமே, அந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது எனக் கூற முடியாது எனத் தெரிவித்தனர்.
மேலும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தத் துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதால் SIR தேவையானது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அனைத்து வாதங்களையும் ஏற்று, SIR-க்கு எதிரான அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் ரத்து செய்ததாகவும் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தெரிவித்தார்.


