Last Updated:
S.I.R. | தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4ஆம் தேதி S.I.R. பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், வீடு வீடாக சென்று சிறப்பு தீவிர திருத்தத்துக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.
November 07, 2025 3:14 PM IST


