Singapore Travel advice: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில் சிங்கப்பூர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் அத்தியாவசியமில்லாத அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்குமாறு வெளியுறவு அமைச்சகம் (MFA) இன்று (மே 7) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நிலையில்லாத பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைச்சகம் இந்த பயண ஆலோசனையை வெளியிட்டதாக கூறியுள்ளது.
குறிப்பாக பயணிகள் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கும்படியும் MFA கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தற்போது இரு நாடுகளிலும் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அது சொன்னது.
பெரிய அளவிலான கூட்டங்களைத் தவிர்ப்பது, உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கவனிப்பது, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது போன்ற அறிவுரைகளையும் அது கூறியுள்ளது.
கூடுதலாக, https://eregister.mfa.gov.sg என்ற MFA இணைய முகவரியில் பதிவு செய்துகொள்ளவும் அது கேட்டுக்கொண்டது.

