கடந்த சில நாட்களாக வெள்ளி விலை சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர தொடங்கி உள்ளது. இன்று (பிப்ரவரி 21) நிலவரப்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, வரும் நாட்களில் வெள்ளி விலை எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகளை நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர். இது முதலீட்டாளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டி வருகின்றன.


