இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையான உயர்வை கண்டு வருகிறது. கடந்த காலங்களில் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.95,000ஆக இருந்தது நிலையில், தற்போது அது ரூ.1,80,000ஐ எட்டி உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு ஆண்டில் சுமார் 70 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, வெள்ளியும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக பொருளாதார நிலைமை நிச்சயமற்றதாகிவிட்டதாலும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமான தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.


