கடந்தாண்டு முதல் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இதனால், வெள்ளி வாங்கும் மக்கள் கவலையடைந்தாலும், அதில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதற்கிடையே, தினந்தோறும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் வாங்குபவர்கள் தற்போது வெள்ளி பக்கம் திரும்பியுள்ளனர். இருப்பினும், வெள்ளியை நம்பி முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் மக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே உள்ளது. இதற்கான விரிவான பதிலை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.


