முதலாவதாக, வெள்ளி விலை நிலையானதாக இருக்காது. அதேபோல், தங்கத்தை விட வெள்ளியின் மதிப்பும் குறைவு. மேலும், வெள்ளியின் சந்தை மதிப்பு தங்கத்தை விட வேகமாக மாறுகிறது. வெள்ளி விலைகளில் நிலைத்தன்மை இல்லாததால், வங்கிகள் இதற்கு கடன் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. ஆகையால், வங்கிகள் பெரும்பாலும் தங்கத்தை அடமானமாக வைத்து பணம் வழங்குகின்றன.

