வெள்ளி விலை சமீப காலமாக வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்து வந்தவர்கள் தற்போது வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர். இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடுமையான விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விலை உயர்வு சந்தையில் போலி வெள்ளி நுழைவதற்கு வழிவகுக்கிறது என்றும், வாங்குபவர்கள் கவனமாக வெள்ளியை வாங்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


