Last Updated:
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 329 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தகத்தின் போது டெக் மகேந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை சந்தித்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன.
கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ஆயிரத்து 40 உயர்ந்த தங்கம் விலை, திங்களன்று 120 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 480-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 185 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல்,மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் குறைந்து 74 ஆயிரத்து 529 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 329 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தகத்தின் போது டெக் மகேந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.