• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Sensex 1340 புள்ளிகள் சரிவு.. ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பு.. கதறும் முதலீட்டாளர்கள்! | Black Thursday on Dalal Street: Sensex Crashes 1,100 Points, Investors Lose ₹9 Lakh Crore in Single Session

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Sensex 1340 புள்ளிகள் சரிவு.. ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பு.. கதறும் முதலீட்டாளர்கள்! | Black Thursday on Dalal Street: Sensex Crashes 1,100 Points, Investors Lose ₹9 Lakh Crore in Single Session
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sensex 1340 புள்ளிகள் சரிவு.. ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பு.. கதறும் முதலீட்டாளர்கள்!

இந்தியப் பங்குச்சந்தை இன்று ரத்தகளறியாக மாறியுள்ளது, காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர்ந்து சரிவு பாதையில் இருந்த நிலையில் ஐரோப்பியச் சந்தை துவங்கிய பின்பு அதிரடியாகச் சரியத் துவங்கியது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 1340 புள்ளிகள் சரிந்து 71,327.75 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.

2025ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி 86,159.02 புள்ளிகளைத் தொட்ட நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 52 வார குறைவான அளவான 71,292 புள்ளிகளுக்கு அருகில் வந்துள்ளது. இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் இழந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது. மேலும் நிஃப்டி 50 குறியீடு 370 புள்ளிகள் சரிந்து 22,228 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.

Sensex 1340 புள்ளிகள் சரிவு.. ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பு.. கதறும் முதலீட்டாளர்கள்!

இன்றைய பங்குச்சந்தை சரிவுக்கு மிக முக்கியமான காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து தங்களுடைய முதலீட்டை வெளியேற்றியது தான். FII முதலீட்டாளர்கள் இத்தகைய முடிவுகளை எடுக்க முக்கிய காரணம் அமெரிக்கப் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் அதிரடியாக உயர்ந்தது தான்.

இன்று 10 வருட அமெரிக்க அரசு பத்திரத்தின் மீதான வட்டி வருமானம் 5.32 சதவீதமாக உயர்ந்துள்ள காரணத்தால் பங்குச்சந்தையில் ரிஸ்க் அதிகமுள்ள பங்குச்சந்தையில் இருந்து பங்குகளை விற்பனை செய்து நிலையான லாபம் கிடைக்கும் அரசு பத்திரத்தில் முதலீடு செய்ய முடிவு செய்ததன் விளைவாக சென்செக்ஸ், நிஃப்டி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றத்தை வேகப்படுத்தும் வகையில் ரூபாய் மதிப்பு பெரிய வழியை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 96 ரூபாய்க்கு மேலேயே இருக்கும் காரணத்தால் இந்தியச் சந்தையில் கிடைக்கும் லாபத்தை டாலராக மாற்றும் போது மிகவும் குறைவான லாபத்தையே கொடுக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களுடைய பணத்தை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதோடு கச்சா எண்ணெய் விலை, அதன் மூலம் உருவாகும் பணவீக்க உயர்வு, பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு, வர்த்தக சந்தையில் மந்தநிலை என அடுத்தடுத்து பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் இத்தகைய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் துறைவாரியாகப் பார்க்கும் போது பார்மா, மீடியா, ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, ஹெல்த்கேர், ரியல் எஸ்டேட் ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ஆனால் அதிகப்படியான சரிவை சந்தித்த துறையாக இருப்பது நிஃப்டி மெட்டல், ஆயில் & கேஸ் ஆகியவை 3 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.

இந்த மோசமான சரிவுக்கு மத்தியிலும் ஐடி துறை பங்குகள் தான் முதலீட்டாளர்களின் மிக முக்கியமான நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறது. டிசிஎஸ் பங்குகள் மட்டும் 1.01 சதவீதம் உயர்ந்துள்ளது, இதோடு இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல், டைட்டன், டிரென்ட், ஆக்சிஸ் வங்கி ஆகியவை உயர்வுடன் உள்ளது. இந்த 7 நிறுவனத்தில் 3 நிறுவனங்கள் டாடா குழுமத்தைச் சார்ந்தது, 4 நிறுவனங்கள் ஐடி துறையை சார்ந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article

English summary

Black Thursday on Dalal Street: Sensex Crashes 1,100 Points, Investors Lose ₹9 Lakh Crore in Single Session

Black Thursday on Dalal Street: Sensex Crashes 1,100 Points, Investors Lose ₹9 Lakh Crore in Single Session — Sensex 1000 புள்ளிகள் சரிவு.. ஒரே நாளில் 9 லட்சம் கோடி இழப்பு.. கதறும் முதலீட்டாளர்கள்!

Story first published: Thursday, October 8, 2026, 13:54 [IST]

Read More

Previous Post

“டெல்லியில் எங்கும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை” – மாணிக்கம் தாகூர் எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

18 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு..! | Makkal Osai

Next Post

18 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு..! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin