• Login
Friday, May 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

School Reopen | மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு.. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அறிவிப்பு..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
School Reopen | மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு.. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அறிவிப்பு..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 29, 2026 7:16 AM IST

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கவும், பள்ளிகளில் தேவையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு.

பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ அல்லது வேறு எந்தவிதமான வகுப்புகளோ கட்டாயம் நடத்தப்படக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தது.

முன்னதாக, மே 31-ஆம் தேதி வரை மட்டுமே கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்திலும் ஜூன் 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பல்வேறு நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் முறைப்படி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கவும், பள்ளிகளில் தேவையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் இரு மாநிலப் பள்ளிக்கல்வித்துறைகளும் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

தமிழ் செய்திகள்/இந்தியா/

School Reopen | மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு.. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அறிவிப்பு..!

Read More

Previous Post

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல் – Sri Lanka Tamil News

Next Post

சிங்கப்பூர் ஜாம்பவான்கள் ஜோகூருக்குக் குடியேறுவது ஏன்? ‘கார்டேனியா’வைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இடப்பெயர்வு!

Next Post
சிங்கப்பூர் ஜாம்பவான்கள் ஜோகூருக்குக் குடியேறுவது ஏன்? ‘கார்டேனியா’வைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இடப்பெயர்வு!

சிங்கப்பூர் ஜாம்பவான்கள் ஜோகூருக்குக் குடியேறுவது ஏன்? ‘கார்டேனியா’வைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இடப்பெயர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin