Last Updated:
மொந்தா புயலின் எதிரொலியாக ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொந்தா புயலின் எதிரொலியாக சில மாநில அரசுகள் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளன.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மொந்தா புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திரப்பிரதேசத்தில் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மொந்தா புயல் தற்போது மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) க்கு தென்கிழக்கே சுமார் 20 கி.மீ., காக்கிநாடா (ஆந்திரப் பிரதேசம்) க்கு தெற்கே 110 கி.மீ., விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) க்கு தென்மேற்கே 220 கி.மீ. மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தென்மேற்கே 460 கி.மீ தொலைவில் தொடங்கி உள்ளது.
இது அடுத்த 3-4 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவைச் சுற்றியுள்ள கடற்கரையைக் முழுவதும் கடக்கும். இதனால் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து கரையை கடக்க தொடங்கியுள்ளது.
மொந்தா புயலின் எதிரொலியாக ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடலோர மாவட்டங்களில் நிலைமைக்கு ஏற்ப விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
October 28, 2025 8:47 PM IST


