புதுடில்லி :தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில், எஸ்.பி.ஐ., வங்கியின் செயல்பாட்டுக்கு
உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, பங்குச் சந்தையில் வங்கியின் பங்கு விலை, 2 சதவீதம் வரை சரிந்தது.
தேர்தல் பத்திரங்களுக்கு நிதி வழங்கியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க கூடுதல் அவகாசம் கோரி, கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ., மனு தாக்கல் செய்திருந்தது. நேற்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.,யின் கோரிக்கையைநிராகரித்தது.
மேலும், இன்றைக்குள், தேர்தல் பத்திரங்களுக்கு நிதி அளித்தவர்கள் தொடர்பான முழு தகவல்களையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும்என்றும், அவ்வாறு வழங்காவிட்டால், வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் உச்ச நீதிமன்றம்எச்சரித்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, எஸ்.பி.ஐ.,யின் பங்கு விலை வர்த்தகத்தின் இடையே 2 சதவீதம் வரை சரிந்தது.நேற்று வர்த்தக நேர இறுதியில், தேசிய பங்குச் சந்தையில் எஸ்.பி.ஐ., வங்கியின் பங்கு விலை 1.79 சதவீதம் சரிந்து, 773.95ரூபாயாக இருந்தது. எனினும், இந்த சரிவு தற்காலிகமானது தான் என்றும், இதை நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement