1.44 பில்லியன் மக்களின் இருப்பிடமாக விளங்கும் இந்தியாவில் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அதாவது 65%, 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 2041இல் உச்சகட்டத்தைத் தொட்டு, பணியில் இருக்கும் மக்களின் மக்கள்தொகை அதாவது 20 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 59% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நாட்டின் பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மக்கள்தொகையை கணக்கில் கொண்டு வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழிற்துறை மேம்பாடு, மேக் இன் இந்தியாவின் மேல் கவனம் போன்ற முயற்சிகளின் மூலம் இந்தியா உண்மையாக பயனடைவதை உறுதிப்படுத்த மிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் கல்வியின் வாயிலாக குழந்தைகளின் மேல் முதலீடு செய்வது மிக முக்கியமான ஒன்றானதாகும். எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்தை வரையறுப்பதில் கல்வி வலிமை வாய்ந்த கருவியாக விளங்குகிறது. அதன்படி, தனிப்பட்டவரை மேம்படுத்த உதவும் தீவிரமான சிந்திக்கும் ஆற்றல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், முழுமையான கல்வி, படைப்புத்திறன் மற்றும் புதுமை ஆகியவற்றை வளர்க்கும் முழுமையான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு முழுமையான மேம்பாடு என்பது குழந்தைகளின் உடல்ரீதியான, அறிவுபூர்வ, உணர்வுபூர்வ, புலன்ரீதியான மற்றும் சமூக திறன்களை மேம்படுத்த உதவுகிறது. இந்த திறன்கள் இணைக்கப்படுவது ஒரு மனிதனின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது.
எனவே, கல்வியின் மூலம் குழந்தைகளின் மேல் முதலீடு செய்வது என்பது, எந்த ஒரு நாட்டின் நீண்ட கால வளம், நிலைப்புத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யும் மிக முக்கியத்தும் வாய்ந்த முதலீடாகும். முழுமையான கல்வியை முன்னுரிமைப்படுத்துவதனால், நம்மால் இளவயதினரின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தி, வரும் சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்தை வளர்க்க இயலும்
உலகளாவிய வேலைவாய்ப்பு மையத்தில் நாட்டின் பங்கை வலிமைப்படுத்த முழுமையான கல்வியை வளர்ப்பது மிகவும் முக்கியமாகும். இந்நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, SBI லைஃப் இன்ஷூரன்ஸ் நம் நாட்டின் வருங்காலமான குழந்தைகளின் மேல் முதலீடு செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்முயற்சிதான் SBI லைஃப் ஸ்பெல் பீ ‘ஸ்பெல் மாஸ்டர்ஸ் ஆஃப் இண்டியா’ – இது நாட்டின் வருங்காலத் தலைவர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும்.
13வது சீசனின் கருத்து “முன்னேற்றத்தை உச்சரிக்கும் முன்முயற்சி” என்பது தனிப்பட்டவர்கள் தம் கனவுகள் மற்றும் ஆர்வத்தை தொடரும் சுதந்திரத்தை தரும் பிராண்டின் நோக்கத்தை எதிரொலிக்கிறது. கல்விக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை அடையாளம் காணும் விதமாக SBI லைஃப் நாட்டின் மூலைமுடுக்களிலும் உள்ள
இளவயதினருக்கும் தங்கள் வாய்ப்புகளை ஆராய்ந்து, தம் வெற்றிக்கதையை வடிவமைத்து, அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க தகுந்த தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்த போட்டியின் முக்கிய சிறப்பம்சம் பங்கேற்றவர்களின் பன்முகத்தன்மையாகும். 30 நகரங்களிலிருந்து 350க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இது SBI லைஃபிற்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த இந்தியாவின் வருங்கால தலைவர்களுடன் ஆழ்ந்து ஈடுபடும் வாய்ப்பளித்தது. இந்த போட்டி குழந்தைகளிடையே மொழிப்புலமையின் முக்கியத்துவத்தை மற்றும் வலியுறுத்தாமல், இளம் மனதுகளின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாக கொண்டிருந்தது.
SBI லைஃப் ஸ்பெல் பீ சீசன் 13இன் கிராண்ட் ஃபைனலில் 75 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 2 மாணவர்கள் தேசிய பட்டத்தை வெல்ல ஒருவரோடொருவர் கடும் போட்டியிட்டனர். பிரபல நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான மந்திரா பேடி அவர்கள் தன் புத்துணர்வூட்டும் மற்றும் அன்பான ஆளுமையால், இளம் போட்டியாளர்கள் தத்தம் இடங்களில் இருப்பதைப் போல உணரவைத்தார். ராயான் நவீத் ஸித்திக் மற்றும் அதிதா நாக் அந்நாளின் ஸ்பெல் மாஸ்டர் திரு. சுமந்தோ சட்டோபாத்யாயா அவர்கள் அளித்த மிகக் கடினமான ஸ்பெல்லிங்குகளை கையாண்டு இறுதி சுற்றுக்கு தேர்ச்சி பெற்றனர். கடும் போட்டிக்கு பின்னர் ரயான் SBI லைஃப் ஸ்பெல் பீ சீசன் 13இன் மதிப்பு மிக்க விருதினை வென்றார். திறன்மிக்க இந்த இளம் சிறுவன் விருதுடன் தன் பெற்றோருடன் டிஸ்னிலேண்டிற்கு பயணம் மற்றும் பணமும் பரிசாக பெற்று, தன் பள்ளி மற்றும் பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்துள்ளான்.
இந்தப் போட்டி இந்தியா முழுவதுமுள்ள குழந்தைகளின் மொழிப்புலமையை உயர்த்தியது மட்டுமல்லாமல் அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதுடன் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தும் தளமாகவும் செயல்பட்டது. இது அவர்கள் தங்கள் ஆர்வத்தை அடையாளம் கண்டிபிடிக்கும் மார்கமாக இருந்து நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதில் உதவுமாறு விளங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் கடினமான சவால்களை தாண்டி, குழந்தைகள் வருங்காலத்தில் நம் நாட்டின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு முழுமையாகத் தேவைப்படும் உயர்ந்த போட்டி மனப்பான்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.
நம் நாட்டின் ஒளிமயமான எதிர்கால இலக்கை மனதில் கொண்டு மேலும் அதிக கூட்டாண்மைகள் இளம் மனதுகள் சவால்களை வெற்றிகரமாக சந்தித்து தங்கள் உண்மைத் திறனை அடையாளம் காண்பதற்கு உதவும், இது போன்ற கல்வி சார்ந்த முன் முயற்சிகளை மேற்கொள்ளும் தளத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சில நாட்களில் இது போன்ற முன்முயற்சிகள் கல்வியின் மூலம் முழுமையான மேம்பாட்டின் முக்கியத்துவத்தை பரப்புவதற்கு உதவும். இது நம் வருங்கால சந்ததியினர் சந்திக்கும் சோதனைகளை வெற்றிகரமாக கடப்பதற்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…