டார்க் வெப்பில் கிடைத்த சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பதிவுகளை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடையாளம் காணப்பட்டதாக எஸ்பிஐ கூறியுள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்கள், பிறந்த தேதிகள், பாலினம், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் வீட்டு முகவரிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

