SBI கார்டு ELITE, SBI கார்டு Miles ELITE மற்றும் SBI கார்டு Miles PRIME போன்ற பிரீமியம் கார்டுகளுக்கு தற்போது கிடைத்துவரும் ஒரு கோடி ரூபாய்க்கான இலவச ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் காப்பீட்டை ஜூலை 15ஆம் தேதியிலிருந்து நிறுத்த உள்ளதாக SBI கார்டு அறிவித்துள்ளது. அதேபோல SBI கார்டு PRIME மற்றும் SBI கார்டு Miles PULSE போன்ற கார்டுகளுக்கு கிடைத்துவந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் பலன்களும் ஜூலை 15ஆம் தேதி முதலில் இருந்து நிறுத்தப்படுகிறது. இந்த வேரியண்ட் கார்டுகளை வைத்துள்ள நபர்கள் இனி இந்த இன்சூரன்ஸ் பலன்களைப் பெறுவதற்கு தகுதி பெற மாட்டார்கள்.
அது மட்டுமல்லாமல் கோ பிராண்டட் SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ஆகஸ்ட் 11, 2025 முதலில் இருந்து இன்சூரன்ஸ் பயன்கள் கிடைக்காது. UCO பேங்க் SBI Card ELITE, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா SBI Card ELITE, PSB SBI Card ELITE, KVB SBI Card ELITE, KVB SBI Signature Card மற்றும் அலகாபாத் பேங்க் SBI Card ELITE போன்ற கார்டுகளுக்கு வழங்கப்பட்டுவந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் பலன்கள் இனி வழங்கப்படாது.
அதுபோல UCO வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, PSB, கரூர் வைசியா பேங்க், சவுத் இந்தியன் பேங்க், கர்நாடகா பேங்க், சிட்டி யூனியன் பேங்க், அலகாபாத் பேங்க் மூலமாக வழங்கப்பட்டு வந்த SBI கார்டு PRIME வேரியண்டுகள் மற்றும் UBI, OBC, ஃபெடரல் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வந்த பிளாட்டினம் கிரெடிட் கார்டுகளுக்கான 50 லட்சம் ரூபாய் ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் பலன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் செலுத்தப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை (MAD) கணக்கீட்டையும் SBI கார்டு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஜூலை 15ஆம் தேதியிலிருந்து MADஇல் 100 சதவீத GST, 100 சதவீத EMI தொகை, 100% கட்டணங்கள், 100% ஃபைனான்ஸ் கட்டணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய அதிகபட்ச உச்சவரம்பு தொகை மற்றும் 2% நிலுவையில் உள்ள பேலன்ஸ் போன்றவை சேர்க்கப்படும்.
பணம் செலுத்தும் முறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பின்வரும் வரிசையில் நிலுவையில் உள்ள டியூ தொகை பேமெண்ட்களை நீங்கள் செலுத்த வேண்டும். GST, EMI தொகை, கட்டணங்கள், ஃபைனான்ஸ் கட்டணங்கள், பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர், ரீடைல் பேமெண்ட்கள் மற்றும் இறுதியாக கேஷ் அட்வான்ஸ்.
SBI கார்டு ஹோல்டர்கள் வரக்கூடிய இந்த மாற்றங்களை கவனமாக படித்து தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்களுடைய கார்டை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
June 21, 2025 1:15 PM IST

