[ad_1]
Last Updated:
SBI வங்கி PPO மோசடி குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட தகவலை பகிர வேண்டாம்.
SBI கஸ்டமர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. தற்போது மார்க்கெட்டில் புதுவிதமான மோசடி ஒன்று நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த புதுவிதமான மோசடி குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் கஸ்டமர்களை எச்சரித்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி SBI வங்கி ஆனது இது சம்பந்தமாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கஸ்டமர்களின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை மாற்ற கோரும் விதமாக இந்த மோசடி நடைபெற்று வருகிறது.
“உங்களுடைய பென்ஷன் ஆர்டரை (PPO) விரைவாக செயலாக்கம் செய்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்”, அல்லது “பென்ஷன் வெரிஃபிகேஷன் நிலுவையில் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் உங்களுடைய பென்ஷன் நிறுத்தப்படும்”, என்பது போன்ற SMS அல்லது போன் கால்களை வாடிக்கையாளர்கள் மோசடிக்காரர்கள் இடமிருந்து பெறுகிறார்கள். இது மூலமாக மோசடிக்காரர்கள் கஸ்டமர்கள் அக்கவுண்டுகளின் முழு அணுகலை பெறுகிறார்கள். அதன் பிறகு அக்கவுண்டில் இருக்கும் பணத்தை திருடுகின்றனர். எனவே PPO சரிபார்ப்பு செயல்முறை ஒருபோதும் போன், SMS, லிங்க் அல்லது ATM மூலமாக செய்யப்படாது என்பதை SBI தெளிவாக கூறியுள்ளது.
*ஒருபோதும் உங்களுடைய யூசர் நேம், பாஸ்வேர்ட், ATM PIN அல்லது OTP-ஐ யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
*கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே வங்கி அப்ளிகேஷன்களை டவுன்லோட் அல்லது அப்டேட் செய்ய வேண்டும்.
*ஏதாவது சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டின் அருகில் உள்ள வங்கி கிளைக்கு நேரடியாக செல்லலாம் அல்லது 18001234/ 18002100 என்ற வங்கியின் கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் கால் செய்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
*மோசடிகள் குறித்து புகார் செய்வதற்கு 1930 என்ற சைபர் கிரைம் எண்ணுக்கு போன் செய்யுங்கள் அல்லது cybercrime.gov.in என்ற வெப்சைட்டில் உங்களுடைய புகாரை ஆன்லைனில் நீங்கள் பதிவு செய்யலாம்.
*சந்தேகத்திற்கு உட்பட்ட SMS / Whatsapp லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் இமெயில் எச்சரிக்கைகளை கவனமாக படிக்கவும்.
”உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் என்பது உங்களுடைய வங்கி கணக்கிற்கான ஒரு திறவுகோல். எனவே அதனை பாதுகாப்பாக வைத்து, மோசடிகளை தவிர்க்கவும்”, என்று SBI அதன் கஸ்டமர்களுக்கு எச்சரித்து வருகிறது. 1600 என்ற எண்ணில் இருந்து வரும் போன் கால்கள் உண்மையானவை மற்றும் பாதுகாப்பானவை என்றும் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.
September 07, 2025 12:05 PM IST