அதன்படி, சென்னை அணியின் இன்னிங்ஸை தொடங்கிய சஞ்சு சாம்சன், ஆரம்பம் முதலே அடித்து ஆடி டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் கேப்டன் ருதுராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே, சாம்சனுடன் அடித்து ஆடினார். அபாரமாக விளையாடிய சாம்சன், நடப்பு ஐபிஎல் சீசனின் முதலாவது சதத்தை விளாசினார்.


