Last Updated:
Sanchaar Saathi App | உதவி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
‘சஞ்சார் சாத்தி’ செயலியை கட்டாயமாக்கியதன் மூலம் நாட்டில் சர்வாதிகாரத்தை மத்திய அரசு நிறுவ முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்து புதிய செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலியை முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மத்திய தொலைதொடர்புத்துறை, தொலைந்த செல்போன்களை கண்டறியவும், மோசடி அழைப்புகளை தவிர்க்கவும் பயனர்களுக்கு இது உதவும் என கூறியுள்ளது. ஆனால், உதவி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பெகாசஸ் செயலிபோல் sanchar saathi App, உளவு பார்க்கும் செயலி என்றும் , நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்றும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒவ்வொரு பிரச்னையையும் ஒரு ஆயுதமாக மாற்றி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுப்பது சரியல்ல என கூறியுள்ளார்.
Delhi,Delhi,Delhi
December 02, 2025 3:30 PM IST


