Last Updated:
சஞ்சார் சாத்தி செயலி மக்களின் செல்போனை உளவு பார்க்கும் செயலி எனவும், இது சர்வாதிகாரம் எனவும் பிரியங்கா காந்தி எம்.பி. விமர்சித்துள்ளார்.
‘சஞ்சார் சாத்தி’ செயலியை கட்டாயமாக்கியதன் மூலம் நாட்டில் சர்வாதிகாரத்தை மத்திய அரசு நிறுவ முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை என மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
அனைத்து புதிய செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலியை முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மத்திய தொலைதொடர்புத்துறை, தொலைந்த செல்போன்களை கண்டறியவும், மோசடி அழைப்புகளை தவிர்க்கவும் பயனர்களுக்கு இது உதவும் என கூறியுள்ளது. ஆனால், உதவி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; “சஞ்சார் சாத்தி என்பது ஒரு உளவு பார்க்கும் செயலி, அது அபத்தமானது என்பது தெளிவாகிறது. குடிமக்களுக்கு தனியுரிமை உண்டு. அரசாங்கம் எல்லாவற்றையும் பார்க்காமல் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் செய்திகளை அனுப்ப அனைவருக்கும் தனியுரிமை உரிமை இருக்க வேண்டும்.
Sanchar Saathi is a snooping app, and clearly it’s ridiculous. Citizens have the right to privacy. Everyone must have the right to privacy to send messages to family and friends without the government looking at everything.
It’s not just snooping on the telephone. They’re… pic.twitter.com/omw2XlD5pq— Congress (@INCIndia) December 2, 2025
இது வெறும் தொலைப்பேசியை உளவு பார்ப்பது மட்டுமல்ல. நாட்டை அவர்கள் அனைத்துவிதத்தில் சர்வாதிகாரமாக மாற்றுகிறார்கள். மோசடியைப் பார்ப்பதற்கும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்கள் தொலைபேசியில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கும் இடையே மிக நுண்ணிய கோடு உள்ளது. சைபர் பாதுகாப்பின் தேவை உள்ளது. ஆனால், அதற்கு இது வழி அல்ல” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒவ்வொரு பிரச்னையையும் ஒரு ஆயுதமாக மாற்றி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுப்பது சரியல்ல என கூறியுள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு ஏற்கனவே நிர்ணயித்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே புதிய புதிய பிரச்னைகளை தேடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
#WATCH | Delhi | On the debate around Sanchar Saathi app, Union Minister for Communications Jyotiraditya Scindia says, “When the opposition has no issues, and they are trying to find some, we cannot help them. Our duty is to help the consumers and ensure their safety. The Sanchar… https://t.co/Kr3juNrGFq pic.twitter.com/npwm9R1Kf2
— ANI (@ANI) December 2, 2025
இந்நிலையில், ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் அல்ல என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ‘சஞ்சார் சாத்தி’ செயலி செல்போன்களில் கட்டாயம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், செல்போனில் உள்ள மற்ற செயலிகளைப் போல சஞ்சார் சாத்தி செயலியையும் தேவையெனில் பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.
December 02, 2025 6:56 PM IST


