
Last Updated:
சையிப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் கைலாஷ், வேலை மற்றும் திருமணத்தை இழந்தார்.
பாலிவுட் நடிகர் சையிப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு, வேலை மட்டுமின்றி திருமணமும் நின்று போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி சையிப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது ஷரிபுல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 18 ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியாவை காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரை, மறுநாள் காவல்துறையினர் விடுவித்தனர்.
இந்த நிலையில், காவல்துறையின் நடவடிக்கையால் தனது வேலை பறிபோனதாக ஆகாஷ் கைலாஷ் வேதனையைத் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு நடக்க இருந்த திருமணமும் நின்று போனதாகக் கூறியுள்ளார்.
மணமகளின் குடும்பத்தாரிடம் தனது பாட்டி எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் திருமணத்திற்கு மறுத்துவிட்டதாகவும், தனக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்குமா? என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் ஆகாஷ் கைலாஷ் தெரிவித்துள்ளார்.
Mumbai,Maharashtra
January 27, 2025 9:34 AM IST

