சிங்கப்பூரில் தொலைந்த S$5,000 மதிப்புள்ள தங்க கைச்செயினை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாசிர் ரிஸ் MRT ரயில் நிலையம் அருகில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு வெளியே அது தொலைந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய வெளிநாட்டு ஊழியருக்கு 16 மாதச் சிறை
கடந்த ஜூன் 22 ஆம் தேதி மதியம் சுமார் 1.10 மணியளவில் அந்த கைச்செயின் தொலைத்துவிட்டதாகவும் அதை யாரும் எடுத்தால் தகவல் கூறும்படியும் யாதி என்ற பெண் Stomp தளத்திடம் கேட்டுக்கொண்டார்.
அதில் ஜாவி மொழியில் ‘Muliyati’ என்ற அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைச்செயின், உயிரிழந்த அந்த பெண்ணின் அம்மா தனிப்பட்ட முறையில் அவருக்கு பரிசாக அளித்தது.
தற்போதைய தங்க விலையின் அடிப்படையில், அதன் தற்போதைய மதிப்பு சுமார் S$5,000 இருக்கும் என்றும் அவர் ஸ்டாம்பிடம் கூறினார்.
“Stomp தளம் இதுபோன்ற காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க பெரும்பாலானோருக்கு உதவியுள்ளது.”
இந்நிலையில், கைச்செயினையும் கண்டுபிடிக்க உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“காவல்துறையில் புகார் அளித்துள்ளேன், அதேபோல இங்கேயும் என் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்கிறேன். உதவிக்கு நன்றி” என்று கூறினார் அவர்.
கைச்செயின் பற்றி ஏதேனும் தகவல் உங்களுக்கு தெரிந்தால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது 9384 3761 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள் என stomp கேட்டுக்கொண்டது.
ஜாலான் பெசார் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிரடி சோதனை: 932 பேர் கைது

