Last Updated:
ஜெலென்ஸ்கியைப் பொறுத்தவரை, உக்ரைனின் நிலப்பரப்பை ரஷ்யாவிடம் விட்டுக் கொடுக்காமல் போரை முடிக்க விரும்புகிறார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகள், முன்னெப்போதையும் விட தற்போது மிக நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என, இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றது முதல் டிரம்ப் கூறிவருகிறார். ஆனாலும், போரை நிறுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை பெரிதாக கைகொடுக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்து உரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், போர் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக குறிப்பிட்டார்.
போர் நிறுத்த விவகாரத்தைப் பொறுத்தவரை, ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல, எதிர்காலத்தில் உக்ரைன் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
Russia vs Ukraine : “முடிவுக்கு வருகிறதா 3 ஆண்டு காலப் போர்? – இறுதிக் கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்


