Last Updated:
ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் மீது உக்ரைனின் ஆளில்லா டிரோன்கள் தாக்கியது.
உக்ரைனின் நிப்ரோ நகரில் (Dnipro) ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், உக்ரைனின் 4ஆவது பெரிய நகரமான நிப்ரோ மீது ரஷ்யா தாக்குதல் நிகழ்த்தியதில், அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போர் (AI Generated Image)
மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்தார். இதனிடையே, மீட்பு பணிகளின்போது அப்பகுதியில் பறந்த ரஷ்ய ஆளில்லா ட்ரோனை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பதிலடியாக, ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் மீது உக்ரைனின் ஆளில்லா ட்ரோன்கள் தாக்கியது.

