• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Russia: விளாடிமிர் புதின் அறிவித்த மெகா திட்டம்.. இந்தியாவுக்கு ஸ்பெஷல் அழைப்பு..! | Putin’s Game-Changer for BRICS: Russia Proposes Grain Exchange Platform to Break Western Monopoly on Food Prices

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Russia: விளாடிமிர் புதின் அறிவித்த மெகா திட்டம்.. இந்தியாவுக்கு ஸ்பெஷல் அழைப்பு..! | Putin’s Game-Changer for BRICS: Russia Proposes Grain Exchange Platform to Break Western Monopoly on Food Prices
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Russia: விளாடிமிர் புதின் அறிவித்த மெகா திட்டம்.. இந்தியாவுக்கு ஸ்பெஷல் அழைப்பு..!

உலகின் அடுத்த பெரிய சக்தியாக உருவெடுக்கப்போவது பிரிக்ஸ் நாடுகள் தான், இந்த நிலையில் விவசாய பொருட்கள் உலகளவில் எப்படி வர்த்தகம் செய்யப்பட வேண்டும், எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதில் ஆதிக்கம் பெறுவதற்கு பிரத்யேக தளத்தை உருவாகும் திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிமுகம் செய்துள்ளார்.

உலகளவில் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் சுமார் 42 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது பிரிக்ஸ் நாடுகள். எப்படி கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணைந்து OPEC, OPEC+ என அமைப்பை உருவாக்கி விலையையும், சப்ளையை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செய்கிறதோ அதேபோல் பிரிக்ஸ் நாடுகள் உலகளவில் விவசாய பொருட்கள் துறையில் ஆதிக்கம் செய்யும் வகையில் Grain Exchange என்ற தளத்தை உருவாக்க விளாடிமீர் புடின் இத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.

Russia: விளாடிமிர் புதின் அறிவித்த மெகா திட்டம்.. இந்தியாவுக்கு ஸ்பெஷல் அழைப்பு..!

Grain Exchange என்பது பிரிக்ஸ் நாடுகள் உற்பத்தி செய்யும் கோதுமை, சோளம், போன்ற உணவு தாணியங்கள், பொருட்களை வர்த்தகம் செய்வதற்கான தளமாக இருக்கும்.

விவசாய துறையில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெகு சில நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செய்து வரும் வேளையில், அதன் விலை நிர்ணய ஆதிக்கத்தில் இருந்து விடுப்படவும், அதன் ஆதிக்கத்தை உடைக்கும் வண்ணம் இத்தளம் இருக்கும் என புடின் பிரிக்ஸ் நாடுகள் முன்பு இத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

ஜெய்பூரில் சமீபத்தில் நடத்த கூட்டத்தில் இத்திட்டம் சமர்பிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் 12-13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டத்தில் இத்திட்டம் குறித்த முடிவுகளை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இதுக்குறித்து முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புடின் முதன் முதலில் இந்த யோசனையை 2024ல் அறிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகள் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை முக்கிய உறுப்பினராக இருந்தாலும் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாடுகள் தான் உலகளவிய விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் 42 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது. இத்தளம் அறிமுகம் செய்யப்பட்டால் பிரிக்ஸ் நாடுகள் மத்தியிலான உணவு பொருட்கள் வர்த்தகம் எளிதாகும், உலகளவில் விலை நிர்ணயம் செய்வதிலும் பெரும் பங்கீட்டை பெறும்.

தற்போது அமெரிக்காவில் Chicago Mercantile Exchange (CME), சீனாவில் Dalian Commodity Exchange (DCE) மற்றும் Zhengzhou Commodity Exchange (ZCE), பிரான்ஸ் மற்றும் ஐரோப்பில் Euronext Paris, இந்தியாவில் Multi Commodity Exchange (MCX), லண்டன் சந்தை என பல சந்தைகள் விவசாய பொருட்களுக்காக இயங்கி வந்தாலும் பிரிக்ஸ் நாடுகள் இணைந்தால் இதில் பெரும் ஆதிக்கம் செலுத்த முடியும்.

தற்போது சர்வதேச விவசாய பொருட்கள் வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்வதில் பெரும் பங்கு விகிப்பது Chicago Mercantile Exchange (CME) தான்.

Share This Article

English summary

Putin’s Game-Changer for BRICS: Russia Proposes Grain Exchange Platform to Break Western Monopoly on Food Prices

Putin’s Game-Changer for BRICS: Russia Proposes Grain Exchange Platform to Break Western Monopoly on Food Prices — Russia: புடின் கொண்டுவரும் மெகா திட்டம்.. இந்தியாவுக்கு ஸ்பெஷல் அழைப்பு.. டெல்லியில் முடிவு!

Story first published: Wednesday, August 19, 2026, 19:35 [IST]

Other articles published on Aug 19, 2026

Read More

Previous Post

இந்தியாவில் இ-விசா விதிகளில் புதிய மாற்றம்: பயன்பாட்டிற்கு வந்த புதிய விமான மற்றும் நில எல்லைகள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கோர விபத்து அமலாக்க வாகனங்களுக்குக் கடுமையான விதிகளை விதிக்கக் கோரிக்கைகளை எழுப்பியுள்ளது | Makkal Osai

Next Post
கோர விபத்து அமலாக்க வாகனங்களுக்குக் கடுமையான விதிகளை விதிக்கக் கோரிக்கைகளை எழுப்பியுள்ளது | Makkal Osai

கோர விபத்து அமலாக்க வாகனங்களுக்குக் கடுமையான விதிகளை விதிக்கக் கோரிக்கைகளை எழுப்பியுள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin