• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

RTM முறையில் சென்னை அணியில் தக்கவைக்கப்படும் வீரர் யார்? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 14, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
RTM முறையில் சென்னை அணியில் தக்கவைக்கப்படும் வீரர் யார்? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025 ஐபிஎல் தொடரை முன்னிட்டு மெகா ஏலம் இம்மாதம் 24 அல்லது 25 ஆம் தேதியில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியில் ஆர்.டி.எம். முறையில் தக்க வைக்கப்படும் வீரர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை அணிக்காக தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 சீசன்கள் வரை விளையாடி உள்ளார். ஒட்டுமொத்தமாக தோனி தனது 18 ஆவது ஐபிஎல் சீசனை விளையாட தயாராகி வருகிறார். அன் கேப்டு (UnCapped) ஆட்டக்காரர் பட்டியலில் இடம் பெற்றிருந்த தோனியை சென்னை அணி 4 கோடி ரூபாய் வழங்கி அணியில் தக்க வைத்து கொண்டுள்ளது.

விளம்பரம்

கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ. 18 கோடியும், வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனாவுக்கு  13 கோடி ரூபாயும், ஆல் ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு ரூ. 12 கோடியும், ரவீந்திர ஜடேஜாவுக்கு 18 கோடி ரூபாயும் வழங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்து கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஏலத்திற்கான மொத்த தொகையான 120 கோடி ரூபாயில் 65 கோடியை காலி செய்துள்ளது சென்னை அணி. இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி 55 கோடி ரூபாய் தொகையுடன் பங்கேற்க உள்ளது.

விளம்பரம்

ஆர்.டி.எம். விதி என்றால்…

தக்க வைத்துக் கொள்ளப்பட்ட வீரர்களை தவிர்த்து, ஆர்.டி.எம். முறையில் சென்னை அணியால் ஒரு வீரரை மீண்டும் அணிக்கு கொண்டு வர முடியும். இந்த விதி முன்னர் விளையாடிய ஒரு வீரரை மெகா ஏலத்தின் போது மீண்டும் அணி தக்கவைக்க வழிவகை செய்கிறது.

ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர், மீண்டும் ஏலத்தில் கலந்து கொள்ளும் போது அவரை மற்ற அணிகள் விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். அதேநேரம் அந்த வீரரை மீண்டும் அந்த அணியே தக்கவைக்க விரும்பும் பட்சத்தில் அந்த நேரத்தில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளம்பரம்

முந்தைய சீசனில் ஒரு அணியின் வீரர் ஏலத்தில் விற்கப்பட்டால், அந்த அணியிடம் ஆர்டிஎம் கார்டு இருக்கும் பட்சத்தில் அவரை மீண்டும் தக்கவைக்க முடியும். மெகா ஏலத்தில், பழைய அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தினால், ஏலத்தில் அந்த வீரருக்கு கடைசியாக வைக்கப்பட்ட ஏலத்திற்கு சமமான தொகையை செலுத்த வேண்டும்.

மறுபுறம், பழைய அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவில்லை என்றால், கடைசியாக ஏலம் எடுத்த அணி அந்த வீரரை வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் சென்னை அணியை பொறுத்த அளவில் அணியில் தக்க வைக்கப்படாத நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா ஆர்.டி.எம். முறையில் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க – “ஆஸ்திரேயாவை வென்றாலும் மகிழ்ச்சியாக இல்லை” – இந்திய அணியை குறிப்பிட்டு பாக். பயிற்சியாளர் ஆதங்கம்!

ஒருவேளை இவருக்கான தொகை அதிகரித்து வாங்க முடியாத சூழல் ஏற்பட்டால் ஷர்துல் தாகூர், தீபக் சாகர் அல்லது சமீர் ரிஸ்வி இவர்களில் ஒருவரை சென்னை அணி அணிக்குள் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.

.

Read More

Previous Post

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அரசு ஊழியர்

Next Post

கோவை – ஷீரடி விமான சேவைக்கு வரவேற்பு! | People welcomes coimbatore to Shirdi Flight service

Next Post
கோவை – ஷீரடி விமான சேவைக்கு வரவேற்பு! | People welcomes coimbatore to Shirdi Flight service

கோவை - ஷீரடி விமான சேவைக்கு வரவேற்பு! | People welcomes coimbatore to Shirdi Flight service

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin