• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

RSS 100 years: “ஆர்.எஸ்.எஸ். அரசியலில் நேரடியாக தலையிடாது” – மோகன் பகவத் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
RSS 100 years: “ஆர்.எஸ்.எஸ். அரசியலில் நேரடியாக தலையிடாது” – மோகன் பகவத் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 07, 2026 9:21 PM IST

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசியலில் நேரடியாக தலையிடாது என்றும், தேசபக்தி மற்றும் சமூக முன்னேற்றமே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

News18
News18

ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட சில தனிநபர்கள் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக இருந்தாலும், அந்த அமைப்பு அரசியலில் நேரடியாக தலையிடாது என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி மும்பையில் ‘சங்க யாத்திரை 100 ஆண்டுகள் – புதிய எல்லைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கிய பேச்சாளராகப் பங்கேற்றார். பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான் மற்றும் ஹேமா மாலினி உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பிரமுகர்களும் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மைய சித்தாந்தம், தேசபக்தி மற்றும் இந்துத்துவா ஆகியவை குறித்து மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது நாட்டை வலுப்படுத்த, அனைவரும் முன்னேற வேண்டும் என்றவர், யாரையும் தாழ்வாகக் கருதி முன்னேற முடியாது என்றும் மோகன் பகவத் கூறினார். ஆர்.எஸ்.எஸ் சங்கத்தைப் போல செயல்படும் அமைப்பு உலகில் எங்கும் இல்லை என்று மோகன் பகவத் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் யாருக்கும் எதிரானது அல்ல என்றும், அந்த அமைப்பு அதிகாரத்தையோ புகழையோ விரும்பவில்லை என்றும் கூறிய அவர், நாட்டில் செய்யப்படும் நல்ல பணிகளை ஆதரிப்பதும் வலுப்படுத்துவதுமே ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கம் என்றார்.

ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர் மற்றும் தயானந்த சரஸ்வதி உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் மற்றும் தலைவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைப் பற்றி குறிப்பிடுகையில், சமூகத்திற்கு சரியான திசையை வழங்குவதற்கும் பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும் இன்னும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மோகன் பகவத் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் பாதை அணிவகுப்புகளை நடத்தினாலும், அது ஒரு துணை ராணுவப் படை அல்ல என்றும், தன்னார்வலர்கள் லத்திகளைப் பயன்படுத்துவதால் அந்த அமைப்பை மல்யுத்தக் குழு என்று பார்க்கக்கூடாது என்றும் மோகன் பகவத் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட சில தனிநபர்கள் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக இருந்தாலும், அந்த அமைப்பு அரசியலில் நேரடியாக தலையிடாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பகவத் தனது உரையில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தனது குழந்தைப் பருவத்தில் சந்தித்த இன்னல்களை பற்றி பேசினார். தனது பள்ளி நாட்களில் வந்தே மாதரம் இயக்கம் முதல் சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார் ஹெட்கேவர் என்று மோகன் பகவத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

Tamilmirror Online || கண்டியில் 22 மணி நேரம் நீர் விநியோகம் தடை

Next Post

ஹாட்ரிக்குடன் ஒரே ஓவரில் 4 விக்கெட்.. மேட்ச் ரிசல்ட்டை மாற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெபர்ட் | கிரிக்கெட் செய்திகள்

Next Post
ஹாட்ரிக்குடன் ஒரே ஓவரில் 4 விக்கெட்.. மேட்ச் ரிசல்ட்டை மாற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெபர்ட் | கிரிக்கெட் செய்திகள்

ஹாட்ரிக்குடன் ஒரே ஓவரில் 4 விக்கெட்.. மேட்ச் ரிசல்ட்டை மாற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெபர்ட் | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin