கோலாலம்பூர்:
மலேசியாவில் RON97 மற்றும் டீசலின் விலை வரும்வாரத்தில் லிட்டருக்கு மூன்று காசுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் நாடு முழுவதும் RON97 விலை லிட்டருக்கு 3 வெள்ளி 21 காசிலிருந்து RM3 வெள்ளி 18 காசாக குறையும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல் டீசல் விலை மேற்கு மலேசியாவில் 2 வெள்ளி 88 காசிலிருந்து லிட்டருக்கு RM2.85 ஆக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RON95 விலை லிட்டருக்கு RM2 வெள்ளீ 05 காசாகவும், டீசல் மானிய விலையில் லிட்டருக்கு RM2.15 ஆகவும் சில்லறை விற்பனை செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விலைகள் ஜூலை 9 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!