அப்போது ரோஹித் ஷர்மாவின் அருகில் நின்ற இந்திய பௌலர் அர்ஷ்தீப் சிங், ரோஹித் உண்மையில் என்ன சொன்னார் என்பதை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “விராட் பாயின் சதத்திற்குப் பிறகு ரோஹித் பாய் என்ன சொன்னார் என்று கேட்டு எனக்கு நிறைய செய்திகள் வருகின்றன. எனவே, அவர் சொன்னதை நான் பகிர்ந்து கொள்கிறேன்.” என்று அர்ஷ்தீப் பகிர்ந்து கொண்டார். அதாவது, ரோஹித் “நீலி பாரி, லால் பரி, கம்ரே மே பேண்ட், முஜே நதியா பசந்த்…” என்று கூறியதாக அர்ஷ்தீப் தெரிவித்தார். இதன் அர்த்தம், “நீல தேவதை, சிவப்பு தேவதை, அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார், எனக்கு ஆறுகளை பிடிக்கும்” என்பதே.


