குறிப்பாக, இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆட்டத்தில் அவர் 14 பந்துகளைச் சந்தித்து வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், 4ஆவது இடத்தில் பேட்டிங் செய்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய போட்டியில், ஆடும் லெவனில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக, திலக் வர்மா அல்லது ரிஷப் பந்த் அணியில் இடம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


