Last Updated:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதாக தகவல்கள் இன்று பரவின.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதாக தகவல்கள் இன்று பரவின. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ரோஹித் சர்மா. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட மாட்டார் என்று இன்று தகவல்கள் பரவின.
ரோஹித்திற்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதாகும் ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் 116 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,302 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள்.
டெஸ்டிலிருந்து ரோஹித் ஓய்வை அறிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா குறித்த நினைவுகளை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கியதால், ரோஹித் சர்மா க வலைதளங்களில் பகிரத் தொடங்கியதால், ரோஹித் சர்மா #RohitSharma ஹேஷ் டேக் ட்ரெண்டாகியுள்ளது.


