Last Updated:
Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 3-ஆவது முறையாக வென்ற இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 3-ஆவது முறையாக வென்ற அணி என்ற புதிய வரலாற்றை இந்தியா படைத்துள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யாவின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார்.
துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே, சிக்ஸரை பறக்க விட்டு எதிரணிக்கு பயத்தை காட்டினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, 3 சிக்ஸர், 7 பவுண்டரி என 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு தரமான அடித்தளத்தை அமைத்தார். இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில், 2 ஆவது இடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் சாதனையை, ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
இப்பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 117 ரன்களுடன் முதலிடத்தில் தொடர்கிறார். இதேபோன்று, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் எடுத்த 3 ஆவது ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மா மற்றும் கில் பெற்றுள்ளனர். இப்பட்டியலில், முதல் விக்கெட்டிற்கு 141 ரன்கள் எடுத்து கங்குலி மற்றும் சச்சின் ஜோடி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 10, 2025 6:33 AM IST