அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட நிலையில், வழக்கம்போல் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட பும்ரா, டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.


