Last Updated:
கல்கோடியாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் நேஹா சிங், ரோபோவை தாங்கள் தயாரித்ததாகக் கூறவில்லை என்றும் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சீன தயாரிப்பான ரோபோவை, தங்கள் மாணவர்கள் உருவாக்கிய உள்நாட்டு கண்டுபிடிப்பு எனத் தவறாகச் சித்தரித்ததாக கால்கோடியாஸ் பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ மாநாட்டின் இரண்டாம் நாளில் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கோடியாஸ் பல்கலைக்கழகம் ரோபோ நாய் ஒன்றை காட்சிப்படுத்தியது.
இந்த வீடியோ அதிகம் கவனம் பெற்ற நிலையில், மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது சீனாவைச் சேர்ந்த Unitree Go2 என்ற ரோபோ என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர்.
ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியக் கண்டுபிடிப்பாகக் காட்டி முதலீடுகளை ஈர்க்க முயன்றதாக கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, மாநாட்டின் கண்காட்சி அரங்கை காலி செய்து வெளியேறுமாறு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான இந்த எதிர்மறைப் பிரச்சாரம் மாணவர்களின் மன உறுதியைக் குலைப்பதாகத் தெரிவித்துள்ளது.


