• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

RM37.5 மில்லியன் மதிப்பிலான 600 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: சிலாங்கூர் போலீஸ் கமிஷனர் தகவல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
RM37.5 மில்லியன் மதிப்பிலான 600 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: சிலாங்கூர் போலீஸ் கமிஷனர் தகவல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மலேசியக் சர்வதேச விமான நிலைய (KLIA) முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில், உள்ளூர் சந்தைக்காகக் கோக்கேன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற கும்பல் உட்பட ஆறு போதைப்பொருள் கடத்தல் கூட்டமைப்புகளைச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 4 முதல் நேற்று முன்தினம் வரை நடத்தப்பட்ட தொடர் நடவடிக்கைகளில், 22 முதல் 54 வயதிற்குட்பட்ட 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலப் போலிஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார், இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், குறித்த சோதனைகளில் மொத்தம் 600.3 கிலோகிராம் எடை கொண்ட RM37.5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கஞ்சா பூக்கள் (96.1kg), ஷாபு (408.6kg), ஹெரோயின் பேஸ் (87.9kg) மற்றும் கோகேன் (7.7kg) ஆகியவை அடங்கும் என்றார்.

மேலும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘டொயோட்டா ஹைலக்ஸ்’ (Toyota Hilux) மற்றும் ‘ஹோண்டா சிட்டி’ (Honda City) வாகனங்களுடன், RM2,704 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் , கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் சமூக வருகைப் பாஸ் (Social Visit Pass) மூலம் மலேசியாவிற்குள் நுழைந்து, போதைப்பொருள் ‘கேரியர்களாக’ (Drug Mules) செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

WhatsApp மற்றும் Telegram செயலிகள் வாயிலாக அதிக சம்பளம் தரும் வேலை தருவதாகக் கூறி இவர்களைத் தொடர்புகொண்ட நபர்கள், மலேசியாவிற்கு வரவழைத்து பிற நாடுகளுக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லுமாறு ஏமாற்றியுள்ளனர். KLIA விமான நிலையத்தில் ‘மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின்’ (MCBA) ஸ்கேனர் சோதனையின் போது, 39 வயது வெளிநாட்டவரின் பெட்டியிலிருந்து 7.7 கிலோ கோக்கேன் கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் மீது 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழும், இருவர் மீது குடிவரவுச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.



Read More

Previous Post

மலை மலையாய் பணத்தை வைத்திருக்கும் IT நிறுவனங்கள்.. இப்போ கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.. ஏன்..?! | Indian IT Services Shift from Cash-Rich to Debt for M&A Deals: Persistent, Coforge, and Cognizant success

Next Post

ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

Next Post
ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin