கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவில் செயற்பட்டுவந்ததாக நம்பப்படும் மிகப்பெரிய அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 23 அன்று செத்தியூவைச் சுற்றியுள்ள இரண்டு சோதனைகளில் 590.18 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர், இதன் மொத்தம் மதிப்பு RM25 மில்லியன் ஆகும்.


