Last Updated:
ஒரு வீரர் அல்லது ஒரு அணி தோல்வியில் இருக்கும்போது அவர்களைக் கைவிடாமல், அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
நியூஸ் 18 குழுமத்தின் Rising Bharat உச்சிமாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில், அரசியல், வணிகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அந்த வகையில் இரண்டாவது நாளான இன்று கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ், ஷமி மற்றும் யுஸ்வேந்திர சாஹல், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் சர்வம் AI இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பங்கேற்கு பேசியதாவது-
விளையாட்டு என்பது ஒரு ரிஸ்க். அதில் எதற்கும் உத்தரவாதம் கிடையாது. இன்று நீங்கள் 100 ரன்கள் எடுக்கலாம், ஆனால் நாளை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கலாம். இந்த நிச்சயமற்ற நிலை விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.
ஒரு வீரர் அல்லது ஒரு அணி தோல்வியில் இருக்கும்போது அவர்களைக் கைவிடாமல், அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். வெற்றி கிடைக்கும்போது கொண்டாடுவதை விட, சரிவில் இருக்கும்போது உடன் நிற்பதே உண்மையான பலம். என்று தெரிவித்தார்.


