• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Richest CM | இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு.. தமிழக முதல்வருக்கு எவ்வளவு சொத்து தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
December 30, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
Richest CM | இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு.. தமிழக முதல்வருக்கு எவ்வளவு சொத்து தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 30, 2024 10:17 PM IST

Richest CM | மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முந்தைய இடங்களை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

News18

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) இந்த சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடம்பிடித்துள்ளார். ரூ. 931 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார முதல்வர் என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. எனினும், சந்திரபாபுவுக்கு ரூ.10 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மம்தாவுக்கு முந்தைய இடங்களை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் பெற்றுள்ளனர். உமர் அப்துல்லா 30-வது இடமும், பினராயி விஜயன் 29-வது இடமும் பெற்றுள்ளனர். உமர் அப்துல்லாவின் சொத்து மதிப்பு ரூ.55 லட்சம் என்றும், பினராயி விஜயனின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு என்ன இடம்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 சொத்து வைத்துள்ள அதேவேளையில், எந்தக் கடனும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் கிடைக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடன் 6-ம் இடம் பிடித்துள்ளார். அதேபோல் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ரூ.51 கோடியுடன் 3-ம் இடம்பிடித்துள்ளார்.

Also Read | Pongal Holidays 2025 | பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை – தமிழ்நாடு அரசு முடிவுக்கு காத்திருக்கும் மாணவர்கள்!

அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா கண்டு ரூ.332 கோடி சொத்துக்களுடன் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்து இந்தியாவின் இரண்டாவது பணக்கார முதல்வராகியுள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்த தகவல்களை மாநில முதல்வர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

December 30, 2024 10:04 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Richest CM | இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு.. தமிழக முதல்வருக்கு எவ்வளவு சொத்து தெரியுமா?

Read More

Previous Post

முல்லைத்தீவு விமானப்படை தளம் தடுப்பு மையமாக அறிவிப்பு!

Next Post

‘அரசர் மாண்டு விட்டார்’ – விராட் கோலியை விமர்சித்த சைமன் கேட்டிச் | king is dead simon katich comments virat kohli

Next Post
‘அரசர் மாண்டு விட்டார்’ – விராட் கோலியை விமர்சித்த சைமன் கேட்டிச் | king is dead simon katich comments virat kohli

‘அரசர் மாண்டு விட்டார்’ - விராட் கோலியை விமர்சித்த சைமன் கேட்டிச் | king is dead simon katich comments virat kohli

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin