சித்ரதுர்கா : ”நானும் லோக்சபா தேர்தலில், நானும் சீட் எதிர்பார்க்கிறேன். பா.ஜ., தலைவர்களுடன் பேசியுள்ளேன்,” என, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீ ரங்கையா தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் கூறியதாவது:
நான் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, மாநிலத்தின் வெவ்வேறு பணியாற்றிய அனுபவம் உள்ளது.
சித்ரதுர்கா கலெக்டராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். நலம் விரும்பிகள், வாக்காளர்களின் விருப்பத்துக்கு பணிந்து, அரசியலில் நுழைய முடிவு செய்துள்ளேன். விரைவில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.,வில் இணைவேன்.
நான் துமகூரு, சிக்க நாயகனஹள்ளியின், எச்.மேலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே, சித்ரதுர்காவுடன் எனக்கு தொடர்பு உள்ளது. ஹொசதுர்கா தாலுகா எல்லையில் தங்கி, மக்களுடன் நல்லுறவு வைத்துள்ளேன்.
துமகூரின் சிரா, பாவகடா தாலுகாக்கள், சித்ரதுர்கா லோக்சபா தொகுதிக்கு உட்படுவதால், நானும் உள்ளூர்வாசிதான்.
சித்ரதுர்கா எம்.பி., நாராயணசாமி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடாவிட்டால், பா.ஜ.,வுக்கு மாற்று வேட்பாளர் தேவை. இந்தத் தொகுதி எஸ்.சி., பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.
எனவே எனக்கு சீட் தரும்படி, பா.ஜ., மேலிடத்திடம் கோரியுள்ளேன். தொகுதியை சுற்றி வந்து, முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement