Last Updated:
Republic Day 2026 | இந்தியாவின் 77வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி இந்திய குடிமக்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் 77வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி இந்திய குடிமக்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதன் பிறகு, அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. 2 ஆண்டு, 11 மாதம், 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது. இதை ஆண்டுதோறும் குடியரசு தினமாகக் கொண்டாடுகின்றோம்.
குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் படை பலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணிவகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும். இதற்கு முன் குடியரசு தலைவர் கொடி ஏற்றுவார். முப்படை அணிவகுப்புடன், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்கும். பல மாநிலங்களின் கலாசார வாகன ஊர்திகள் இதில் சேரும். இந்த அணிவகுப்பு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் அமையும். மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடி ஏற்றுவார்கள். மாநில அரசு சார்பாக பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது அதிபரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். இந்த முறை ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிகின்றனர்.


