Last Updated:
ஆர்.சி.பி. அணிக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.பி.டிவில்லியர்ஸ் 4522 ரன்கள் குவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஏ.பி.டிவில்லியர்ஸ் தான் ஐபிஎல் தொடரில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மீண்டும் திரும்புவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த முறை வீரராக இல்லாமல் அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக அவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். மூன்று சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் 2011 முதல் ஆர்.சி.பி அணியில் இடம் பெற்று வந்தார்.
2021 இல் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தார். இருப்பினும் ஆர்.சி.பி அணி உடனான அவரது உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. பல்வேறு தருணங்களில் அவர் ஆர்.சி.பி அணியை ஆதரித்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
அந்த அணிக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.பி.டிவில்லியர்ஸ் 4522 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏ.பி.டிவில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
August 25, 2025 2:48 PM IST


