Last Updated:
Ration Shop | ரேஷன் பொருட்கள் விநியோகம் மற்றும் தானியங்கி முறையை மேம்படுத்தும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும், ரேஷன் பொருட்கள் விநியோக திட்டத்தை மேம்படுத்தி, முற்றிலும் ‘டிஜிட்டல்’ மயமாக்கும் முறைக்கு 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 16-வது நிதிக்குழுவின் பதவிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக மத்திய அரசின் பங்காக 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 80 கோடி குடிமக்களுக்கு அடிப்படை ரேஷன் வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) மூலம், நாட்டில் உள்ள தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் உணவு தானியங்கள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. அதன்படி பொது விநியோகத் திட்டத்தை மேலும் நவீனமாகவும் திறம்படவும் மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள விநியோகம், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மேலும் வெளிப்படையானதாகவும் திறம்பட மாற்றுவதோடு, புகார்களுக்குத் தீர்வு காண்பதையும் விரைவுபடுத்தும்.” என்றார்.
அஸ்வினி வைஷ்ணவ்
அந்தவகையில் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ரேஷன் விநியோகம் மற்றும் கட்டமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளது. அதன்படி ரேஷன் பொருட்களுக்கான போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பொருட்களை கையாளுதல் ஆகியவை நவீனப்படுத்தப்படவுள்ளதாக கூறினார்.
#WATCH | Delhi | Union Minister Ashwini Vaishnaw says, “…Today, a major decision has been taken regarding the Public Distribution System (PDS), the mechanism responsible for implementing this program, through the introduction of the ‘SARTHAK-PDS’ scheme. This program entails an… pic.twitter.com/2POENVU0ad
— ANI (@ANI) May 27, 2026
குறிப்பாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ‘மெஷின் லேர்னிங்’, கணினி மொழி செயலாக்கம் மற்றும் ‘பிளாக்செயின்’ போன்ற உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரேஷன் விநியோக முறையை நவீனப்படுத்துவதே ‘சார்தக் பி.டி.எஸ்.திட்டத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
ஒவ்வொரு உணவு தானியப் பைக்கும் ஒரு QR குறியீடு வழங்கப்படும். தானியங்களைக் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும் GPS குறியிடப்படும். கண்காணிப்பதற்காக முறையான டாஷ்போர்டுகள் உருவாக்கப்படும். இதன் மூலம் ரேஷன் பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களை கண்காணித்தல், க்யூஆர் கோடு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் உணவு தானிய தேவையை முன்கூட்டியே கணிக்கும் கருவிகளும் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
Delhi,Delhi,Delhi
May 28, 2026 10:14 AM IST
Ration | நாடு முழுவதும் ரேஷன் பொருள் விநியோகத்தில் வருகிறது மெகா மாற்றம்… ரூ.25,530 கோடியில் மத்திய அரசின் அதிரடி திட்டம்!


