பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகளி கள்ளமலை முக்காலியை சேர்ந்தவர் சுரேஷ், 29. இவர், தன் வீட்டில், கடந்த, 2018 மற்றும் 2020ல், ஏப்., மே மாதங்களில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, அகளி போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு நேற்று, பாலக்காடு விரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில், சுரேஷ் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதிபடுத்தியது. குற்றவாளிக்கு 63 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சஞ்சு தீர்ப்பளித்தார்.
மேலும், தண்டனையை ஏக காலத்தில், 20 ஆண்டுகள் அனுபவித்தால் போதும் எனவும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement