ஏ.என்.ஐ.க்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; “இன்று பிற்பகலில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நானும் மத்திய உள்துறைச் செயலாளரும் அந்த இடத்திற்குச் சென்றோம். மேலும், ராகுல் காந்தியிடம் மிகவும் பணிவாகவும் மரியாதையுடனும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவது முறையல்ல என்று எடுத்துரைக்க முயன்றேன். நீட் (NEET) தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் அது தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்ற உறுதிமொழி அளிக்கப்பட்டால், இந்தப் போராட்டத்தை கைவிடத் தயார் என்று அவர் கூறினார்.


