மும்பையில் இருக்கும் வோர்லி என்ற இடத்தில் 12 வயதுடைய ஒரு சிறப்பு குழந்தை தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது.
எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு தொலைபேசி அடித்துள்ளது. அப்போது பேசிய காவல்துறை அதிகாரி, உங்கள் குழந்தை எங்களுடன் தான் இருக்கிறார் என்று கூறிய பிறகு தான் பெற்றோர்களுக்கு நிம்மதி மூச்சே வந்தது.
அந்த குழந்தையின் பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது.
இதையும் படிக்க:
விமானத்தில் முகம்சுழிக்க வைத்த இளம் ஜோடியின் செயல்.. 4 மணி நேரமாக கதறிய சகபயணி
அந்த குழந்தை தொலைந்த பிறகு, அவர் திக்குதெரியாமல் எங்கெங்கோ சுற்றியுள்ளார். அப்போது அவரை பார்த்த ஒரு காவலர், அந்த குழந்தையின் கழுத்தில் இருக்கும் ஒரு லாக்கிட்டை கவனித்தார். அதில் ஒரு QR Code இருந்துள்ளது. அந்த QR Code-யை Scan செய்ததில், பெற்றோர்களின் நம்பர்கள் இருந்துள்ளது.
அந்த நம்பருக்கு அழைத்த பிறகு விவரங்களை வாங்கி, அந்த குழந்தையை பெற்றோருடன் சேர்த்துள்ளனர் காவல்துறையினர். QR கோட் மூலம் ஒரு சிறப்பு குழந்தை குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
