[ad_1]
Last Updated:
Qatar Attack | இந்த தாக்குதலுக்கு கத்தார் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் தலைநகரில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஹமாஸ் படையினருக்கு கத்தார் ஆதரவு அளித்து வருகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்தப்படி, இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுதலை உள்ளிட்டவை குறித்து எகிப்து மற்றும் கத்தார் அரசின் மூலம் இஸ்ரேலுடன் ஹமாஸ் படையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கத்தார் மீது இஸ்ரேல் திடீரென வான் வழி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ஹமாஸ் படையின் அலுவலகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு கத்தார் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
September 10, 2025 6:46 AM IST