முதலாவதாக, சொத்துப் பங்கீடு என்பது தந்தை உயில் எழுதியுள்ளாரா? இல்லையா? என்பதைப் பொறுத்தது. தந்தை இறப்பதற்கு முன் சட்டப்பூர்வமான உயிலை எழுதியிருந்தால், சொத்துப் பங்கீடு அதில் கூறப்பட்டுள்ளபடியே வழங்கப்படும். அதன்படி, உயிலில் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்கை மட்டுமே மகள் கோர உரிமை உண்டு. இருப்பினும், இதுபோன்ற விஷயங்களில் நேரடியாக முடிவெடுப்பதை விட, ஒரு வழக்கறிஞரை அணுகுவது நல்லது என்று பல்வந்த் ஜெயின் கூறுகிறார்.


