இந்தியாவில், சொத்துரிமைகள் மதம், பாலினம் மற்றும் உறவைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில், சொத்தின் வாரிசுரிமை என்பது பல குடும்பங்களில் குழப்பம், தகராறுகள் மற்றும் சட்டப் போராட்டங்களை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். அதிலும் குறிப்பாக, ஒருவர் உயில் எழுதாமல் இறந்தால், அவர்களின் சொத்தை யார் வாரிசாக பெற முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சட்டம் என்ன சொல்கிறது, சொத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதுதொடர்பாக இந்தியாவில் தெளிவான சட்ட அமைப்பு உள்ளது. இது வாரிசுரிமை செயல்முறையை ஒழுங்குப்படுத்துகிறது.


