• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Premium Credit Card | பிரீமியம் கிரெடிட் கார்டுகளின் சேமிப்புகளை எப்படி அதிகப்படுத்தலாம்…?

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Premium Credit Card | பிரீமியம் கிரெடிட் கார்டுகளின் சேமிப்புகளை எப்படி அதிகப்படுத்தலாம்…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆண்டுவாரியான கட்டணங்களோடு ஒரு சில வங்கிகள் பிரீமியம் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இதில் பல்வேறு ரிவார்டுகள், கேஷ்பேக் மற்றும் பிரத்யேகமான நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார்டுகளில் பயணம் சார்ந்த நன்மைகள், எரிபொருள் சேமிப்புகள் மற்றும் ஷாப்பிங் டிஸ்கவுண்டுகள் போன்றவை அடங்கும்.

இது பெய்டு கிரெடிட் கார்டு (Paid credit card) என்று அழைக்கப்படுகிறது. பெய்டு கிரெடிட் கார்டை நீங்கள் சரியான புத்திசாலித்தனமாக பயன்படுத்தும்போது, அதிலிருந்து அதிகபட்ச பலன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பெய்டு கிரெடிட் கார்டு மூலமாக அதிக அளவு பணத்தை எப்படி சேமிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

பெய்டு கிரெடிட் கார்டுகள்:

பெய்டு கிரெடிட் கார்டுகள் என்பது அந்த கார்டை நீங்கள் வாங்குவதற்கான கட்டணங்கள் அல்லது ஆண்டுவாரியான கட்டணங்களை வசூலிக்கக்கூடிய, ஆனால் அதே நேரத்தில் பிரீமியம் பலன்களைத் தரும் கார்டுகள். இதில் அதிக கேஷ்பேக் விகிதங்கள், ஏர்போர்ட்டுகளில் இலவச லான்ச் அனுமதி மற்றும் மைல் ஸ்டோன் ரிவார்டுகள் போன்றவை அடங்கும்.

இன்னும் ஒரு சில கார்டுகளில் குறிப்பிட்ட ஒரு செலவு செய்யும் வரம்பு அமைக்கப்பட்டு, அந்த வரம்பை நீங்கள் அடைந்துவிட்டால் ஆண்டுவாரியான கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். இது மாதிரியான கார்டுகள் வழக்கமாக ஓராண்டுக்கு 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கின்றன. சில கார்டுகளில் இலவச மூவி டிக்கெட், டிராவல் இன்சூரன்ஸ் போன்ற நன்மைகள் வழங்கப்படுகின்றன.

இந்த கார்டுகள் பணத்தை சேமிக்கக்கூடிய கருவிகள் என்று வங்கிகள் இவற்றை பிரபலப்படுத்தினாலும், அவை வசூலிக்கும் ஆண்டுவாரியான கட்டணங்களுடன், அவை வழங்கும் ரிவார்டுகளை ஒப்பிட்டுப் பார்த்து சரியான ஒன்றை தேர்வு செய்வது அவசியம். நீங்கள் செலவு செய்த பணத்தைவிட அது வழங்கும் நன்மைகள் அதிகமாக இருந்தால் பெய்டு கார்டு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில், கட்டணம் இல்லாத அல்லது குறைந்த கட்டணம் கொண்ட கார்டுகள் சிறந்த ஆப்ஷன் ஆகும்.

பெய்டு கிரெடிட் கார்டுகள் எப்படி பணத்தை சேமிக்க உதவுகின்றன?

பெய்டு கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தினால் பெரிய அளவிலான சேமிப்புகளை நீங்கள் செய்யலாம். மளிகை சாமான், எரிபொருள் மற்றும் பயணம் போன்றவற்றிற்கு நீங்கள் செய்யும் செலவுகளுக்கு கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள் கிடைக்கும். ஒரு சில கார்டுகள் டைனிங் டிஸ்கவுண்டுகள் மற்றும் பிரத்யேகமான ஷாப்பிங் டீல்களை வழங்குகின்றன. இது கூடுதல் சேமிப்புகளாக அமைகிறது.

இதையும் படிக்க: 2025ன் முதல் காலாண்டில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…?

அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு இலவச ஏர்போர்ட் லான்ச் அனுமதி போன்றவை பயனுள்ளதாக இருக்கும். இன்னும் சில பிரீமியம் கார்டுகள் இன்சூரன்ஸ் காப்பீட்டை வழங்குகின்றன. எனினும், இந்த ரிவார்டுகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம். பெய்டு கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணம் அதிகமாக இருந்தால், இந்த கார்டு உங்களுக்கு பயனற்றதாகிவிடும். ஆகவே, உங்களுடைய செலவு செய்யும் வழக்கத்திற்கு ஒத்துப்போகக்கூடிய ஒரு கார்டை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

யாருக்கெல்லாம் பெய்டு கிரெடிட் கார்டுகள் சரியான ஆப்ஷனாக இருக்காது?

பொதுவாக பெய்டு கிரெடிட் கார்டு என்பது அனைவருக்குமானது அல்ல. நீங்கள் குறைவான அளவில் செலவு செய்யும் ஒரு நபர் என்றால், நிச்சயமாக உங்களுக்கு இது சரியானதாக இருக்காது. மேலும், ரிவார்டுகள் காலாவதியாகிவிட்டால் அதன் மூலம் நீங்கள் பெற்ற பலன்கள் அனைத்தும் வீணாகிவிடும். ஏர்போர்ட் லான்ச் அனுமதி அல்லது பயணம் சம்பந்தப்பட்ட நன்மைகள் போன்றவை அனைத்து கார்டு ஹோல்டர்களுக்கும் நன்மைகளை அளிப்பது கிடையாது. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள், ஹோட்டல்களுக்கு செல்பவர்கள் அல்லது ஷாப்பிங் செய்பவர்கள் அதிக பணத்தை சேமிக்கலாம்.

இதையும் படிக்க: கேஒய்சி சரிபார்ப்பிற்காக இனி அலைய வேண்டாம்… மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வீடு வீடாகச் சென்று சேவை வழங்கவுள்ள இந்திய அஞ்சல்துறை…!

குறைவாக செலவு செய்பவர்கள் அல்லது எப்போதாவது செலவு செய்பவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டின் ஆண்டுவாரியான கட்டணம் கூடுதல் பாரமாகவே இருக்கும். எனவே, பல்வேறு கார்டுகளை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்துகொண்டு, உங்களுடைய சேமிப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

First Published :

April 09, 2025 9:13 PM IST

Read More

Previous Post

ரஹானே, ரிங்கு சிங் அதிரடிக்கு பலன் இல்லாமல் போனது: 4 ரன் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது கொல்கத்தா | KKR vs LSG match in ipl 2025 explained

Next Post

Decode | வெடித்தது வர்த்தகப் போர்… சீனாவை காலி செய்ய அதிரடி திட்டம் போடும் Trump…

Next Post
Decode | வெடித்தது வர்த்தகப் போர்… சீனாவை காலி செய்ய அதிரடி திட்டம் போடும் Trump…

Decode | வெடித்தது வர்த்தகப் போர்... சீனாவை காலி செய்ய அதிரடி திட்டம் போடும் Trump...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin