இந்தத் திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதற்கு பிறகும் நீங்கள் விரும்பினால் கணக்கை நீடிக்கலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பங்களிப்புகள் எதுவும் செய்யப்படாவிட்டாலும், கணக்கு பழைய இருப்புக்கு வட்டி (7.1%) தொடர்ந்து ஈட்டும். ஒருவர் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.9,00,000ஆக இருக்கும். அதாவது, ரூ.16,27,284 வட்டியுடன் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ரூ.16.27 லட்சம் வட்டி மாதத்திற்கு ரூ.9,628 என்ற விகிதத்தில் ஓய்வூதியமாக வழங்கப்படும்.


